‘20’க்கு நானே முழுப்பொறுப்பு -கோட்டாபய அறிவிப்பு

20வது திருத்தத்தினை உருவாக்கியவன் என்ற அடிப்படையில் அதற்கான பொறுப்பை ஏற்பதாக ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார் எனஅமைச்சர் மகிந்தஅமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்றையதினம் அமைச்சரவைக்கூட்டம் இடம்பெற்றது.இதன்போதே ஜனாதிபதி மேற்படி கொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் 20வது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுகுழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சர் மகிந்தஅமரவீர தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் தற்காலிக நடவடிக்கை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் புதிய அரசமைப்பு துரிதவேகத்தில் முன்வைக்கப்படும் என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு ஏற்ற அரசமைப்பை தயாரிப்பதற்காக எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply