19 ஆவது திருத்தச் சட்டத்தின் மாமாக்கள் யார்?

19 ஆவது அரசியலமைப்பு என்பது யானை, புலி, நரி கூட்டணியால் உருவாக்கப்பட்டது. அதாவது ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, தமிழ் புலம்பெயர்ந்தோர், தன்னார்வ தொண்டு குழு மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் தான் 19 ஆவது திருத்த சட்டத்தின் மாமாக்கள் ஆவார்கள்.

அவர்கள் ராஜபக்ஷர்களை அரசியலிலிருந்து நீக்க விரும்பினர். 19 ஆவது திருத்தம் என்பது ராஜபக்ஷர்களை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பு திருத்தமாகும்.

எனவே 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்காக மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்பவே 20 வது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

20 வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் விரைவில் நாட்டிற்கு ஏற்ற புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

20 வது திருத்தம் தொடர்பாக மக்கள் மத்தியில் பொய்யான கட்டுக்கதைகளை உருவாக்க எதிர்க்கட்சி முயற்சிக்கிறது. 20 வது திருத்தத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அது தொடர்பாகக் கலந்துரையாடக் குழு ஒன்றைப் பிரதமர் நியமித்துள்ளார்.

எனவே, எதிர்க்கட்சி 20 குறித்து தவறான அச்சத்தை எழுப்புகிறது.

இந்த அரசியலமைப்பு திருத்தம் போன்ற விடயங்களை உருவாக்குவதே பொதுவான நடைமுறை. வரைவு சட்டத் துறை அத்தகைய வரைவைத் தயாரித்து சட்டமா அதிபர் துறை மற்றும் நீதி அமைச்சகத்திற்கு அதன் பிரதியை அனுப்பும்.

வாக்கெடுப்புக்குச் செல்லலாமா வேண்டாமா அல்லது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் நிறைவேற்றப்படலாம் என்பதைச் சட்டமா அதிபர் உறுதிப்படுத்திய பின்னரே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

19 சுயாதீன ஆணையகம் சுதந்திரமானவையா? 19 ஆவது திருத்தம் அமைச்சரவையை 30 ஆக மட்டுப்படுத்தியிருந்தாலும், நல்லாட்சி என்பது மக்களை உள்ளடக்கி அமைச்சரவையை அதிகரிக்கவில்லையா? 19 ஆவது திருத்தம் காரணமாக ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டை இருபுறமும் இழுக்கவில்லையா? அந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தவர்களும் அதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

எங்கள் அரசாங்கத்தின் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் 20 வது திருத்தத்தின் சில அம்சங்களை மாற்ற முன்மொழிகின்றனர்.

அது அவர்களின் உரிமை. நாங்கள் ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி மற்றும் அரசாங்கம் அதனால் தான் பிரதமர் குழுவை அமைத்தார்.

19 வது திருத்தம் என்ற போர்வையில் இந்த நாட்டை அழித்தவர்கள் அரசியலமைப்பிற்காகக் கண்ணீர் சிந்துகிறார்கள். இந்த நாட்டு மக்களை மீண்டும் அவர்களின் பொய்களால் ஏமாற்ற முடியாது.

20 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை நீட்டிக்கவில்லை.

இரண்டு தடவைக்கு மேல் கேட்க முடியாது எற்ற பிரிவு மாற்றப்படவில்லை. கோட்டாபய-மஹிந்த கூட்டணி தான் இந்த நாட்டை கட்டியெழுப்பிய நல்லிணக்கம்.

அதிகாரம் மற்றும் பலம் உயர் மட்டத்திலிருந்தாலும், மக்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை ஒரு போதும் பழுதாக்க மாட்டோம் என்பதை மக்கள் அறிவார்கள்.

நாம் அதை உறுதிப்படுத்துகின்றோம். எனவே, நல்லாட்சிக் குழுவின் பொய்களால் மக்கள் ஏமாற வேண்டாம் என பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply