யாருக்கும் அஞ்சேல் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு…

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்து மாதவி நடித்து வரும் திரைப்படம் யாருக்கும் அஞ்சேல். புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தைத் தொடர்ந்து முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமான யாருக்கும் அஞ்சேல் படத்தை இவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாகவும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழுவினர். 

தற்போது இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் இந்த போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். விஜய்சேதுபதி ப்ரோடக்ஷன்ஸ் இந்த படத்தை வழங்குகிறது. சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சிலம்பரசன் இணைந்து படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். தேவராஜலு மார்கண்டேயன் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.  

பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முற்றும் முழுதாக ஊட்டி பின்னணியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது .

சுமார் முப்பது நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டனர் படக்குழுவினர்.இந்த திரைப்படத்தில் பிந்து மாதவி தன் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. 

Be the first to comment

Leave a Reply