மாஸ்ட்டர் திரைப்பட படப்பிடிப்பு தளத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியீடு…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் திகதி நடைபெற்றது.

இந்த படத்தை  செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன. சமூக வலைத்தளங்களில் புதிய சாதனைகளும் படைத்தன. இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.லாக்டவுனுக்கு பிறகு தனது இயக்குனர் குழுவுடன் இணைந்து ஒரு புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .

தற்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது தளபதி விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.ஷிமோகாவில் நடந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Be the first to comment

Leave a Reply