பல்கலைக்கழக மாணவர்களுக்கு உருவான அதிஷ்டம்

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை மேலும் 8000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப வேந்தர்களுடனான கலந்துரையாடல் சமீபத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் இதற்கான இணக்கப்பாடு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன் பிரகாரம் 38000 ற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே மருத்துவ பீடத்திற்கு 369 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்க் ஆணைக்குழுவின் உப தலைவர் அறிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply