பல்கலைக்கழக தேர்வுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிட மானியங்கள் தீர்மானம்…

2019 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக தேர்விற்கான வெட்டுப்புள்ளியை தயாரிக்கும் நடவடிக்கை தற்போது நடந்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக இம்முறை வெட்டுப்புள்ளிகள் வெளியிடுவதற்கு தாமதமாகியுள்ளது ஆகவும் வெட்டுப்புள்ளிகளை கூடுமான வரை விரைவில் வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிட எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply