நானி நடிக்கும் வி திரைப்படத்தைப் பற்றிய தகவல்…

நான் ஈ திரைப்பட புகழ் நடிகர் நானியின் 25ஆவது படமான வி படத்தை மோகன் கிருஷ்ணா இந்திரா காந்தி இயக்குகிறார்.இந்த படத்திற்கு வித்தியாசமாக V என்ற ஒற்றை எழுத்தில் படக்குழுவினர் பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.அமித் திரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படம் மார்ச் 25ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கபட்டிருந்தது.ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இந்த படத்தின் டீஸர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த திரைப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது. இந்த படம் செப்டம்பர் முதல் வாரத்தில் அதாவது செப்டம்பர் 5ஆம் திகதி வெளியாகும் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.நானியின் 25ஆவது படம் என்பதால் இதனை திரையரங்கில் பார்க்கவேண்டும் என்று ரசிகர்கள் சிலரும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

நானி நடித்துள்ள வி படம் அமேசான் ப்ரைம்மில் வரும் செப்டம்பர் 5ஆம் திகதி வெளியானது.ரசிகர்கள் சிலர் இந்த படத்தை திரையரங்குகளில் காணமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.நானி தனது அடுத்த படமான டக் ஜெகதீஷ் படம் நிச்சயம் திரையரங்கில் வெளியாகும் என்று நம்பிக்கையளித்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 5ஆம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இருந்தாலும் நானி முதல்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Be the first to comment

Leave a Reply