கௌதம் கார்த்திக்கை இயக்கம் தளபதி விஜய் பட இயக்குனர்…

கடந்த 1999ஆம் ஆண்டு விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான ’துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் எழில் அதன் பின்னர் அவர் பல வெற்றித் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார்.

குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளிவந்த ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் எழில் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு த்ரில் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும் முழுக்க முழுக்க இந்த திரைப்படத்தில் சஸ்பென்ஸ், த்ரில் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனவே எழிலின் வழக்கமான காதல் மற்றும் நகைச்சுவை காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது

Be the first to comment

Leave a Reply