இலங்கையில் பிளாஸ்டிக் முட்டைகள்.. சற்று அவதானத்துடன் இருக்குமாறு சுகாதாரத் திணைக்களம் அறிவிப்பு.

இலங்கையில் செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களை ஆராய்ந்து வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது உள்நாட்டு சந்தைகளில் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டு வரும் பிளாஸ்டிக் முட்டைகள் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு சந்தைகளிலோ அல்லது சில்லறை கடைகளிலோ கொள்வனவு செய்யும் முட்டைகள் மீது சந்தேகம் ஏற்படுமேயானால் உடனடியாக அறிவிக்க வேண்டுமென இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply