காலையில் கடைக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டதால் பரபரப்பு

காலையில் கடைக்குச் சென்ற மாணவி இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குறிப்பிட்ட மாணவி காலை 6.45 மணியளவில் அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியேவந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை கடத்தி சென்றதாக பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மாணவியின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் மாணவியிடமிருந்த கையடக்க தொலைபேசி மூலம் அவரை தொடர்புகொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கண்டிபொலிஸார் தமது விசேட பிரிவின் மூலம் கையடக்க தொலைபேசியை கண்காணித்தவேளை கண்டியின் பல பகுதிகளில் மாணவி காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.

இதன் பின்னர் முற்பகல் 9.30 மணியளவில் வேறொரு பாடசாலைக்குஅருகில் மாணவி காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியை கடத்தியவர்கள் யார் என்பதை இதுவரை அடையாளம் காணவில்லை விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply