தான் பெற்ற சிசுவையே புதைத்த தாய் கைது

கணவனை விட்டு பிரிந்து வாழும் நிலையில் தனக்கு பிறந்த சிசுவை தனது வீட்டுத்தோட்டத்தில் புதைத்த தாயை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எஹலியகொட, அக்கரபனஹ பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் எஹலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே திருமணமான இப்பெண், கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

இந்தநிலையில் வேறொரு நபரின் உதவியுடன் பிறந்த சிசுவை தோட்டத்தில் புதைத்ததாகவும், கைது செய்யப்பட்ட தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply