முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியின் காணி உரிமையாளர் நிலத்தை அகழும் போது இவை மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் உரிமையாளர் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிசாார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் இப் பகுதியினை மீள தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply