தென்னிலங்கையில் பௌத்த மக்களை கொதிப்படைய வைத்த சம்பவம்! தேரர்கள் எடுத்த முடிவு

தென்னிலங்கையில் புத்தர் சிலை மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் தேரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் தேரர்கள் சிலர் இன்று சத்தியாக்கிரக போராட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

கம்பஹா, திவுலப்பிட்டிய வைத்தியாசலைக்கு அருகில் ஹொரகஸ்முல்ல, பீ.பி.மாவத்தையில் அமைந்துள்ள புத்தர் சிலை மீது அண்மையில் மலக்கழிவுகள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியிலுள்ள பௌத்தர்கள் பெரும் கவலையடைந்ததுடன், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

எனினும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply