ஷாருக்கான் திரைப்படத்தில் தனுஷ் பட நாயகி…

ஹிந்தி திரைப்பட உலகின் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கானின் அடுத்த படத்தை அட்லி இயக்குவதாக தகவல்கள் வெளிவந்தாலும் இப்போதைய நிலவரப்படி ஷாருக்கானின் அடுத்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி என்பவர்தான் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் இணையும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி பண்ணு நடிக்க இருப்பதாக தெரிகிறது.

தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி பண்ணு . இவர் கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்பதும், தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படம் உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி பண்ணு முதல் முறையாக நடிக்க இருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Be the first to comment

Leave a Reply