வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றன என விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்.

வெள்ளி கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்குத் தேவையான பாஸ்பீன் வாயு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த தகவலால் விஞ்ஞானிகளிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது . வணிமண்டலத்தில் உள்ள வேறு எந்த கிரகத்திலும் இதுபோன்ற வாயுக்கள் இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை. இதனால் வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்குமா என்றும் விஞ்ஞானிகளிடையே விவாதம் எழுப்பப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜானே கிரேவ்ஸ் எனும் விஞ்ஞானி தலைமையிலான ஒரு ஆய்வுக்குழு வெள்ளி கிரகத்தைக் குறித்து தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு வந்தனர் . ஹவாய் மற்றும் சிலியின் அட்டகாமா பாலைவனப் பகுதிகளில் இருந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் போது வெள்ளிக் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள அமில மேகங்களில் பாஸ்பீன் வாயு இருப்பதற்கான தடயம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இயற்கையாகவே வெள்ளி கிரகத்தில் வெப்பநிலை 900 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். அதுவும் பகல் நேரங்களில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதற்குத் தேவையான வெப்பநிலை வெள்ளியில் நிலவும். இதனால் வெள்ளி கிரகத்தை குறித்த ஆய்வுகளில் எப்போதும் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுவார்கள்.

தற்போது வெள்ளிக் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் (45 மைல்) பாஸ்பீன் வாயுவிற்கான தடயத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . கரிமப் பொருட்கள் எரிவதன்மூலம் வெளியேறும் வாயுவான இந்த பாஸ்பின் பொதுவாக நிறமற்றது மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடியதும் ஆகும். பாஸ்பீன் வாயுவில் ஒரு மடங்கு பாஸ்பரஸ் மற்றும் 3 மடங்கு ஹைட்ரஜன் என்ற அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஹைட்ரஜன் என்பது மனிதர்கள் உயிர் வாழ தேவையான ஒரு வாயு ஆகும். வெள்ளிக் கிரகத்தில் ஹைட்ரஜன் அடங்கியுள்ள பாஸ்பீன் அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் வெள்ளிக்கிரகத்திலும் உயிரினங்கள் இருப்பதற்கான சூழ்நிலை பிரகாசமாக இருப்பதாகச் சிலர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

ஆனால் நேச்சர் வானியில் பத்திரிக்கை இந்த நிகழ்வு குறித்து வேறுவிதமாகவும் கருத்துத் தெரிவித்து இருக்கிறது . அதில் “இத்தகைய பாஸ்பீன் இருப்பது வினஸில் உயிர்கள் வாழ்ந்ததற்கான எதையும் நிரூபிக்கவில்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறது. ஆயினும் வெள்ளி கிரகத்தின் உடைந்த மேற்பரப்பில் சுழலும் மேகங்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே பாஸ்பீனை மிக விரைவாக உமிழ்கின்றன எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கார்டிஃப் பல்கலைக் கழக இயற்பியல் மற்றும் வானியல் பள்ளியின் முன்னணி எழுத்தாளர் ஜேன் கிரேவ்ஸ், பாஸ்பீன் மட்டுமே இருப்பது பூமியின் அடுத்த பக்கத்து அண்டை கிரகங்களின் உயிர் வாழ்க்கைக்கு சான்றாக இல்லை எனத் தெளிவு படுத்தியிருக்கிறார். மேலும் ஒரு கிரகத்தில் பாஸ்பீன் ஏராளமாக இருந்தாலும் கூட அது வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றைக் கொண்டிருக்கவில்லை. வேறு அங்கு நிலைமைகள் மிகவும் சூடாகவும் வறண்டதாகவும் இருக்கிறது எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply