வீட்டில் இறையருள் நிலைத்திருக்கச் செய்ய வேண்டியவை யாவை? …

இறையருள் உள்ள வீட்டில் நிச்சயம் பொன்மழை பொழியும். லட்சுமி தாண்டவம் நடக்கும். விளக்கில் வசிக்கும் லட்சுமி வீட்டில் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றும் போது எத்தனை முகங்கள் ஏற்றவேண்டும் என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு.

ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலனைத்தரும். இரு முகம் ஏற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மூன்று முகம் ஏற்றினால் புத்திர சுகத்தை கொடுக்கும். நான்கு முகம் ஏற்றினால் மாடு, கன்று என்று கால்நடைச் செல்வம் பெருகும். ஐந்து முகம் ஏற்றினால் எட்டுவிதமான செல்வச்செழிப்பும் பெருகும்.

தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தீபத்தை கொண்டு செல்லக்கூடாது என்கின்றன சாஸ்திரங்கள்.

வெள்ளிக்கிழமை ராகுகாலபூஜை பதினைந்து வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

Be the first to comment

Leave a Reply