ராகவா லாரன்ஸ் மற்றும் அக்ஷய் குமாரின் அடுத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது…

ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரம் அக்சய்குமார் நடிப்பில் இயக்குனர் ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ’லட்சுமி பாம்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா காரணமாக இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாததால் இந்த படம் இணையதளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதன்பின்னர் இந்த படம் இணையதளத்தில் தான் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த மோஷன் போஸ்டரின் இறுதியில் நவம்பர் 9ஆம் திகதி தீபாவளி விருந்தாக இந்தப் படம் இணையதளத்தில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அக்ஷய்குமார் ரசிகர்கள் இந்த படத்தை தீபாவளி கொண்டாட்டமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Be the first to comment

Leave a Reply