ரஞ்சித் ஜெயகொடியின் அடுத்த திரைப்படம்… இணைந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

மக்கள் செல்வன் நடித்த புரியாத புதிர் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி தற்போது ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்தத் திரைப்படத்தின் பெயர் யாருக்கு அஞ்சேல்.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிந்து மாதவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளார். இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரை விஜய் சேதுபதிதான் கடந்த மார்ச் மாதம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.

Be the first to comment

Leave a Reply