மாஸ்டர் லோகேஷ் மற்றும் கமலஹசனின் அடுத்த திரைப்படம் குறித்த சுவாரஷ்ய தகவல்.

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அவர், தான் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் தகவல் குறித்த அறிவிப்பை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிக்க இருப்பதாக நேற்று கூறியிருந்தார்.

இவ்வேளையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் திரைப்படம் தான் என்று தமிழ் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக செய்திகள் பரவி வருகின்றன. அதுமட்டுமின்றி இந்த படத்தில் ’எவனென்று நினைத்தாய்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘விஸ்வரூபம்’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளான இந்த வரிகளே லோகேஷின் அடுத்த பட டைட்டில் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்து வருகிறது. மேலும் இது ஒரு அரசியல் கலந்த திரில்லர் படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் முதலில் ரஜினிகாந்த் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்ததை அடுத்து தற்போது கமல்ஹாசனே அந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த செய்திகள் அனைத்தும் இன்று மாலை லோகேஷ் கனகராஜின் சமூகவலைத்தள பக்கத்தில் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Be the first to comment

Leave a Reply