பிக்பாஸில் கலந்து கொள்வதை விட எனக்கு முக்கியமான வேலை வேறு அதிகம் உள்ளது என பதிலடி கொடுத்த பிரபலம்…

பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்க உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக பல பிரபலங்களின் பெயர்கள் செய்திகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது.

குறிப்பாக நடிகர்கள் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், நடிகைகள் அம்ரிதா ஐயர், சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் உள்பட பல பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் ஒருவர் கருண் ராமன் என்று கூறப்பட்டது. இவர் நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்களின் செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் என்பதும், ஃபேஷன் கோரியோகிராபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியலில் வருவதை அடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

அதை விட முக்கியமான வேலை எனக்கு இருக்கிறது. எனவே வீண் வதந்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து கருண் ராமன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply