நடிகர் சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

நடிகர் சூர்யா சமீபத்தில் நீட் குறித்து உறுதியான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்றும் அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி எஸ். சுப்ரமணியம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நிதிபதிக்கு கடிதம் எழுதினார்.

அதுமட்டுமின்றி சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்கள் என்பது சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு எதிரான புகார் ஒன்று குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply