ஜிவி பிரகாஷ்குமார் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியது

இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் கதாநாயகனாக மாறியுள்ளவர் ஜீ.வி.பிரகாஷ் குமார்.இவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் பேச்சுலர் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

எக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல மக்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்றது.

பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகுகிறார்.பிரபல மாடலான திவ்யா சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமானவர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படத்தின் மீதமுள்ள ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது .

தற்போது லாக்டவுனுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்புகளை தொடங்கியுள்ளதாக படத்தின் நாயகி திவ்ய பாரதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply