கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையினால் பயனாளிகளுக்கான கொடுப்பணவுகள் வழங்கி வைப்பு – கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக பங்கேற்பு..!

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையினால் வீடுகளற்ற வறிய நிலையில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட அம்பாறை மாவட்ட பயனாளிகளுக்கான வீடுகளை நிர்மானிப்பதற்காக மற்றும் புணருத்தானம் செய்வதற்காக வழங்கிவைக்கப்பட்ட கொடுப்பனவின் இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் தவிசாளர் ஜெ.ஜெனார்த்தனன், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் இரா .நெடுஞ்செழியன் மாவட்ட செயலக அதிகாரிகள்,பயனாளிகள்,பொதுமக்கள் மற்றும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலோடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply