இன்று (2020-09- 16) ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள்

இன்று (2020-09- 16) ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க ஏற்பாட்டில் இதுவரை நியமனம் வழங்கப்படாது மீதமுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுகுடும்ப சுமைக்காக தொழில் செய்த எங்களை EPF/JOB மற்றும் JOB போன்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்ட செயல் அநீதியாக கருதுகின்றோம்.அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு 10000 பட்டதாரிகளை உள்வாங்கும் செயற்திட்டத்தை மிக விரைவாக ஆரம்பிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து இவ் அமைதி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்கின்றோம். இப்போராட்டமானது 22மாவட்டங்களிலும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2020.09.15 நேற்று எங்களுடைய மேன்முறையீட்டின் இறுதி தினமாகையால் எதிர் வரும் ஒருவார காலத்திற்குள் தகுந்த பதில் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தவறும் பட்சத்தில் 23ம் திகதி கொழும்பு ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யவுள்ளோம் என்பதனையும் தெரிவிக்கின்றோம். ஆகவே பட்டதாரிகளை மேலும் மேலும் மனஅழுத்தத்திற்கு ஆளாக்காமல் 10000 பட்டதாராகளை உள்வாங்கும் செயற்திட்டத்தை மிக விரைவாக ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.என ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply