இணையதள வாசிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை திரிஷா

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை த்ரிஷா துணை நடிகையாக திரையில் கால்பதித்து இன்று வளர்ந்து வரும் ஹீரோயின்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். மேல் மட்ட பெண்ணாக மட்டுமல்லாமல், நம் பார்த்து பழகும் பக்கத்து வீட்டு பெண்ணாகவும் திரையில் நடிப்பை வெளிப்படுத்துவது த்ரிஷாவின் மிகப்பெரிய திறமை. தமிழ் துறையில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என அனைத்து துறையிலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வரும் த்ரிஷா தற்போது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய சிறு வயது புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். “Angel face, Devil thoughts” என்ற வாசகத்தை குறிப்பிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு தற்போது அதிக அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படத்தில் த்ரிஷா அழகாக இருப்பதாகவும், அப்போது இருந்தது போல தான் இப்போதும் இருக்கிறார் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். த்ரிஷா தற்போது அமெரிக்காவில் நியூ யார்க்கில் இருந்து தான் இந்தபதிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். தற்போது வரை அதிகமான பாராட்டுக்கள் இந்த புகைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply