அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் குழு ஒன்று நியமனம்!

இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சபை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராயவே 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த குழுவில் அங்கம் வகிக்கும் 5 பேரின் விபரங்கள்…

விசேட வைத்திய நிபுணர் ஹேமந்தா பெரேரா
ராகம மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பிரசந்த விஜேசிங்க
வைத்திய நிபுணர் அனுலா விஜேசுந்தர
வைத்திய நிபுணர் மைத்ரி சந்திரரத்ன
வைத்திய நிபுணர் தர்ஷன சிறிசேன

Be the first to comment

Leave a Reply