அண்ணாத்த திரைப்படத்தில் பிகில் வில்லன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது படப்பிடிப்புகள் மீண்டும் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகள் சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து ஜனவரி முதல் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடித்து வருகிறார் என்று கூறப்பட்டது. தற்போது இந்த படத்தின் மெயின் வில்லன் ஜாக்கிஷராஃப் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே தளபதி விஜய் நடித்த ’பிகில்’ படத்தில் மெயின் வில்லனாக நடித்தவர் என்பதும், பிகில் படத்தை அடுத்து தற்போது ’அண்ணாத்த’ படத்திலும் இவர் இணைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் மற்றும் ஜாக்கிஷராப் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியான் உள்பட பல நடித்து வருகின்றனர் என்பதும் டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் தெரிந்தது

Be the first to comment

Leave a Reply