அங்கொட லொக்கா: சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரும் பொலிஸார்

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவரான அங்கொட லொக்காவிற்கு காணிகளை கைப்பற்ற பணம் திரட்டிய விதம் குறித்து ஆராய சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் இது குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

எதேச்சதிகாரமாகவும் அச்சுறுத்தியும் அங்கொட லொக்காவினால் கைப்பற்றப்பட்ட 05 ஏக்கர் காணி குறித்து தகவல் அம்பலமாகியுள்ளது.

இந்த காணிகளூடாக 2,000 இலட்சம் நிதியை சந்தேக நபர் முறையற்ற வகையில் திரட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெல்லம்பிட்டிய, அங்கொடை, கோதொட்டுவ மற்றும் முல்லேரியா உள்ளிட்ட பகுதிகளில் சந்தேக நபர் தனது உறவினர்களின பெயர்களில் காணிகளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

2019 ஆம் ஆண்டு 12 காணிகளை சந்தேக நபர் கைப்பற்றியுள்ளதுடன், அவை 309 பேர்ச்சர்ஸ் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply