பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை: தமிழர் பகுதியில் பெருமளவில் சிக்கிய சட்டவிரோத பொருட்கள்

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு உயிலங்குளம் பகுதியில் வைத்து இன்று அதிகாலை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 52 கிலோ கேரள கஞ்சா மற்றும் 920 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர்களிமிருந்து மேலதிகமாக 100 அமெரிக்க டொலர் நாணயதாள்களுடன் 5, 1,725,000 ரூபா பணம், லொறி மற்றும் டிரக்டர் ஒன்றும் கைப்பற்றபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply