கண்டியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவி கண்டுபிடிப்பு

கண்டி – பஹிரவகந்த பகுதியில் இன்று (15) காலை கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மாணவி கல்வி கற்கும் பாடசாலைக்கு அருகிலிருந்து அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த மாணவியை மேலதிக விசாரணைகளுக்காக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது 12 வயதான குறித்த மாணவி இன்று காலை கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply