சருகுப்புலியொன்று இறந்த நிலையில் மீட்பு!

திருகோணமலை – சாம்பல்தீவு பாலத்துக்கு அருகாமையில் சருகுப்புலியொன்று வீதியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக வனஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் அறிவித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply