இலங்கையில் விற்பனையாகும் ஆபத்தான கிறீம்கள் – மக்களுக்கு எ ச்சரிக்கை

இலங்கையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் முகப்பூச்சுக்கள் விற்பனை செய்யப்படுவதாக எ ச்சரிக்கப்பட்டுள்ளது.பலவேறு முகப்பூ ச்சுக்கள் வகைகள் மற்றும் திரவ வகைகளை சேர்த்து புதிய உற்பத்தியாக அழகு கலை நிலையங்களும் கடைகளிலும் பெண்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறான உற்பத்திகளை கொள்வனவு செய்வதனை தவிர்க்குமாறு நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகார சபை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு தயாரிக்கப்படும் முகப்பூச்சுக்களில் ஈயம், பாதரசம் மற்றும் காட்மியத்தின் உள்ளடக்கம் அதிகபட்சத்தை கலந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கான வர்த்தமாணி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மனித உ டலுக்கு பொருத்தமற்ற இவ்வாறான கிறீம்கள் மற்றும் திரவங்கள் பல அழகு கலை நிலையங்களிலும் புறக்கோட்டை பிரதேசத்திலும் விற்பனை செய்யப்படுவதாக மு றைப்பாடுகள் கிடைத்துள்ளளது.

இது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள ஆயிரம் கடைகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகார சபையின் இயக்குனர் அசே பண்டார தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply