ஸ்ரீலங்கா சிங்கள பௌத்த நாடல்ல என தெரிவித்த மங்களவுக்கு ஏற்பட்ட நிலை

இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை என நல்லாட்சி அரசின் காலத்தில் தெரிவித்தமை குறித்து முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீரவை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

மாத்தறை சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் விசாரணைக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அங்கு சுமார் இரண்டு மணிநேரம் அவரை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

மாத்தறையில் மங்களசமரவீர தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply