விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்கள் எப்படி அழிக்கப்பட்டன? வெளிவரும் இரகசியம்

விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிக்க அமெரிக்காவுடன் 2007 இல் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கையே காரணம்.

ஆனால் சோபா பிரச்சினைக்குரியது ஏனென்றால் அது அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் இலங்கையில் ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களை கொண்டு செல்வதற்கும்,இலங்கையின் சட்டகட்டமைப்புக்கு அப்பால் தங்கள் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கும் என ஸ்ரீலங்கா வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சவுத் ஏசியன் மொனிட்டரிற்காக பி.கே பாலசந்திரனுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அளித்துள்ள விரிவான பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது

அமெரிக்காவுடனான முன்னைய பாதுகாப்பு உடன்படிக்கையான ஏசிஎஸ்ஏ 2007 இல் கைச்சாத்திடப்பட்டு 2017 இல் புதுப்பிக்கப்பட்டது.

அந்த உடன்படிக்கை விடுதலைப்புலிகளின் மிதக்கும் ஆயுதங்களஞ்சியங்களை கண்டுபிடித்து அழிக்க உதவியது.

ஆனால் சோபா பிரச்சினைக்குரியது. ஏனென்றால் அது அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் இலங்கையில் ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களை கொண்டு செல்வதற்கும்,இலங்கையின் சட்டகட்டமைப்புக்கு அப்பால் தங்கள் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கும்.

எம்.சி.சி தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கப்பட்டதும் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிப்போம் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்.

இது குறித்து தீர்மானம் எடுப்பதை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எந்த உடன்படிக்கை தொடர்பான எந்த இறுதி முடிவும் நாட்டின் நலன்கள், அரசமைப்பு சட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டதாக காணப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply