உடன் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்ட தடை

இந்தியா முழுவதும் வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருவதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் வருடத்திற்கொருமுறை வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதைத் தடுக்கும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தேவையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply