20 வது திருத்தத்தில் முரண்பாடுகள் என்கிறார் அமைச்சர் பீரிஸ்

20 ஆவது திருத்தச் சட்டத்தை பரிசீலனை செய்வதற்கு பிரதர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று அது தொடர்பான தனது அறிக்கையை கையளிக்கவுள்ளது.

20 ஆவது திருத்த வரைபு குறித்து பரிசீலனை செய்வதற்காக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்தக் குழு நேற்று கலந்துரையாடிய போதே அதில் பல முரண்பாடான நிலைகளை இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இக் குழுவில் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், உதய கம்மன்பில, அலி சப்ரி, நிமால் சிறிபால டிசில்வா, விமால் வீரவன்ச மற்றும் இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரோரா மற்றும் பிரேம்நாத் சி.தொலவத்த ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையிலேய அந்த அறிக்கை இன்று பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், நாளை அது அமைச்சரவையிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவித்த விமல் வீரவன்ச 20 வது திருத்தம் தொடர்பில் ஆளுங்கட்சியில் சிலருக்கு வெவ்வேறான கருத்து முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அத்தோடு, 20 வது திருத்தச் சட்ட விதப்புரைகளுக்கு எதிராக சிவில் அமைப்பு வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் , எதிர் கட்சியிலும் இதற்கு எதிரான முரண்பாட்டில் வழக்கு தாக்கல் செய்ய முனைவதாகவும் தனது கருத்தை பகிரங்கமாக விமல் வீரவன்ச கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply