13வது கொவிட் மரணமும் 13வது திருத்தமும்

விலைவாசியைப் போல் ஏறிவிடாமல்அபிவிருத்தியைப் போல் மெதுவாக ஏறுகிறதுகொரோனா மரண எண்ணிக்கையும் நாட்டில்!

இப்போதெல்லாம் யாரும் கூறுவதில்லைஇந்த நாட்டை

அமெரிக்காவாகசீனாவாகமாற்றுவோம் என …அந்தந்தநாடுகளிலிருந்து வந்தாலேதனிமைப்படுத்தல்தான்!இலங்கைக்குஉலகில்மதிப்பைக் கொடுத்திருக்கிறது கொரொனா!

அந்த வகையில்கொரோனா இலங்கையின்வெளிநாட்டு அமைச்சராகி விட்டது!இந்த நிலையில்இறக்குமதிகளைக் குறைக்கவுள்ளதாகவும் கூறுகிறார்கள்நாட்டில்

13வது திருத்தமும் இந்தியாவிலிருந்து

இறக்குமதி செய்யப்பட்டதாம்ஆதலால்ஒன்பதை மூன்றாகக் குறைப்பதற்கு ஏற்பாடாம்மாகாண சபைகளை!இரண்டுக்காகத்தான் கொண்டு வரப்பட்டதுஒன்றாக…ஒன்றுக்குப் போனால் நாடு நாறிவிடும் என்றுஒன்பதாக்கி விட்டிருந்தார்கள்!வடக்கு – கிழக்கு ஒன்றாகியிருந்தபோதுஆட்சியாளர்கள்மதுவுக்கு கொடுத்தஇடத்தை

மக்களுக்கு கொடுக்கவில்லை!பிரிந்த பிறகு –முஸ்லிமா – தமிழா

முதலமைச்சராவது என்பதிலேயே

கிழக்கு கிளடுதட்டிப் போனது!வடக்கு –முடக்குவாதம் போல்முடங்கியே இருந்தது ஏனைய ஏழும்ஏதோ பிழைத்துக் கொண்டது!இப்படிப் பார்த்தால்ஒன்பதா? மூன்றா?என்பதுதான்கேள்வி!இந்தியா தலையிடும் என்கிறார்கள்எமது கடல் பரப்பில்இந்தியக் கடற்றொழிலாளர்கள் போலவா?

13 ஓர் உயிரிருந்த போராட்டின் வெற்றி என்பதுமறக்கப்பட்டுள்ளது –

தமிழ்த் தேசிய தரப்புகளில்…போராடி இருந்தால்தானே

வயிற்றுப் பிழைப்புக்காக வந்தவர்களிடம்வரலாற்றை எதிர்பார்க்க முடியுமா?

Be the first to comment

Leave a Reply