ரியோவை தொடர்ந்து மேலும் ஒரு நடிகர் பிக் போஸ்சில் பங்கு கொள்கிறார்…

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட ஹீரோ ரியோராஜ் கலந்து கொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி என்று செய்திகள் வெளியானது. இதனை அடுத்து தற்போது மேலும் ஒரு தமிழ் நடிகர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

ஆர்கே சுரேஷ் நடித்த ’டைசன்’ என்ற படத்தில் வில்லனாக நடித்தவரும் பிரபல மாடலுமான பாலாஜி முருகதாஸ் என்பவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply