முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளிற்கு விசேட அறிவிப்பு!

நாளை (16) முதல் பேருந்து முன்னுரிமை பாதையில் மட்டும் பயணிக்குமாறு முச்சக்கர வண்டி சாரதிகள், மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நான்கு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பேருந்து முன்னுரிமை பாதை திட்டம் நேற்று (14) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகர எல்லைக்குள் இந்த போக்குவரத்து பாதை விதிகளை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் பொலிசார் நடத்தும் வீதி ஒழுங்கு குறித்த விழிப்புணர்வு வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று மேற்கு மாகாண மூத்த டி.ஐ.ஜி. தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

போக்குவரத்து பாதை விதி பின்வரும் பகுதிகளில் அமலில் உள்ளது.

பேஸ்லைன் வீதியில் புதிய களனி பாலத்திலிருந்து உருகொடவத்தை, தெமட்டகொட, பொரளை, மற்றும் நாரஹேன்பிட்டி மேம்பாலம் மற்றும் பேஸ்லைன் சந்தி.

ஸ்ரீ ஜெயவர்தனபுர மாவத்தையில்  பொல்டுவ சந்தியிலிருந்து ராஜகிரிய மேம்பாலம், ஆயுர்வேத சுற்றுவட்டம், டி.எஸ்.சேனநாயக்க சந்தி, ஹார்டன் பிளேஸ் சுற்றுவட்டம், நூலக சந்தி மற்றும் லிபர்ட்டி சுற்றுவட்டம் வரை.

காலி வீதியில், வில்லியம் சந்திப்பில் இருந்து டிக்மன்ஸ் வீதி சந்தி, பம்பலபிட்டி, கொள்ளுப்பிட்டி, காலி முகத்திடல் சுற்றுவட்டம், மற்றும் என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம்.

அனுல வித்யாலயாவிலிருந்து ஹை லெவல் வீதி, பேஸ்லைன் சந்தி, பார்க் வீதி சந்தி, திம்பிரிகஸ்யாய சந்தி, தும்முல்ல சந்தி, பித்தளை சந்தி வரை.

Be the first to comment

Leave a Reply