போலி பெண் வைத்தியரை மடக்கி பிடித்த பொலிஸார்!

பல்வேறு நபர்களிடமிம் பண மோசடியில் ஈடுபட்ட பிலியந்தலாவ பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட வைத்தியராக தன்னை அடையாளம் காட்டி, பல்வேறு குற்ற செயல்கள் புரிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டுக்காக குறித்த பெண்ணின் கணவரும் தெஹிவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் பொலிஸ் அதிகாரியாக தன்னை  காண்பித்து பல நபர்களிடமிருந்து 86 ஆயிரம் ரூபா பணம் வசூலித்த குற்றச்சாட்டில் ஒருவரும் கல்கிஸை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply