பிளிப்கார்டில் ஆர்டர் செய்து ஏமாந்த இசையமைப்பாளர்.

பிளிப்கார்டில் ஆப்பிள் கை கடிகாரம் ஆர்டர் செய்த நிலையில் கைக்கடிகாரம் பெட்டியினுள் கற்கள் வைத்தும் அனுப்பப்பட்டதாக இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் குற்றம் சாட்டியுள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டிருக்கிறார்.

தனக்கு சகோதரருக்காக ஆப்பிள் கைக்கடிகாரம் பிளிப்கார்ட்டில் செய்ததாகவும் அந்த பொதியினுள் கற்கள் வைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து புகார் அளித்து அந்த கைக்கடிகாரத்திற்கான பணத்தை திரும்ப கேட்கும் போது அதை தர மறுத்துவிட்டது பிளிப்கார்ட் நிறுவனம் என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமட்டுமன்றி சிப்காட்டில் யாரும் பொருட்கள் வாங்கி ஏமாற வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே சாமை தொடர்பு கொண்ட பிளிப்கார்ட் நிறுவனம் புகாரை ஆராய்ந்து சரி செய்வதாக தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply