பருத்தித்துறையில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை

பருத்தித்துறை வியாபாரி மூலை பகுதியில் கத்திக்குத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பருத்தித்துறை வியாபாரி மூலையில் இன்று மாலை இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடமபெற்றுள்ளது.அதில், அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது 49) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்தரை மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

கத்தியால் குத்திய நபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply