கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக தயார் – ரணில்

ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து எந்தவேளையிலும் விலக தயாரென ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.மேலும் அவர் ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழுகூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு தலைமைத்துவப் போட்டியால் இனிமேலும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாதென தெரிவித்த சிரேஸ்டதலைவர்கள் சிலரிடம் ரணில்விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ரனில் விக்கிரமசிங்க செயற்குழுஉறுப்பினர்களுக்கு பதிலளித்த போது புதிய தலைமைத்துவத்திடம் கட்சியை வழங்குவதற்கு முன்னர் அதனை மறுசீரமைக்கவேண்டுமென தெரிவித்தார் என கட்சிவட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்தோடு கட்சியை முழுமையாக மறுசீரமைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டுமென பெரும்பான்மையான உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்கள் எனவும் இந்த நிலையில் நீண்ட விவாதங்களின் பின்னர் ருவான் விஜேரட்ன பிரதித் தலைவராகத் தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ரணில் விக்கிரமசிங்க தலைவராகச் செயற்படவுள்ளார். அதன் பின்னர் புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார். அனேமாக ருவான் விஜேரட்ன தலைவராகச் செயற்படுவார் எனவும் கூறப்படுகின்றது

Be the first to comment

Leave a Reply