அம்மாவின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடிய நயன்தாரா..

நயன்தாரா தனது அம்மாவின் பிறந்தநாளை தனது அம்மா மற்றும் காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார்.

நயன்தாராவின் அம்மா கேக் வெட்ட அதற்கு நயன்தாரா உதவுவது போன்ற ஒரு புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ஹாப்பி பர்த்டே மை டியரஸ்ட் அம்மு. திருமதி சூரியன் என்ற வாசகத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது இணையத்தில் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நயன்தாரா அவரது காதலன் விக்னேஷ் சிவன் மட்டுமன்றி அவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply