வீட்டில் இருந்த 30 வயது பெண் ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தை!

சேருவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 30 வயதுடைய பெண் ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரை

இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இன்று (13) உத்தரவிட்டார்.

ஸ்ரீமங்கலபுர, சோமபுர, சேருநுவர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

30 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் தனிமையில் இருந்த போது சந்தேக நபர் வீட்டுக்குள் புகுந்து வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய

சந்தேக நபரை கைது செய்துததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply