பிரபல பாடகியின் உறவினரை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் D. இமான்.

இசையமைப்பாளர் டி இமான் திறமையான பாடகர்கள் இசைத்துறையில் திரையுலகில் அறிமுகம் செய்து வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது. அஜித் நடித்த விசுவாசம் என்ற திரைப்படத்தில் திருமூர்த்தி எனப்படும் பாடகரை அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் திரைப்படமான பூமியில் ஒரு புதிய பாடகி ஒருவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் பாடலான தமிழன் என்று சொல்லடா சமீபத்தில் வெளியாகி மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

டி இமான் இசையில் மதன் கார்க்கி பாடல் வரிகளில் டி இமான் மற்றும் அணிருத் சேர்ந்து பாடிய இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளை பாடியவர் லாவண்யா சுந்தர்ராமன். இவர் பிரபல கர்நாடக மற்றும் திரை பட பின்னணிப் பாடகி நித்யஸ்ரீ அவர்களின் நெருங்கிய உறவினர் என டி. இமான்.nnnw சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply