லொறியை தீயிட்டுக்கொழுத்திய விசமிகள்!

லிந்துலை பாமஸ்டன் பகுதியில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்த லொறியை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் என உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயினால் குறித்த நபரின் லொறி முழுமையாக சேதமாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

லிந்துலை பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் வசிக்கும் வீரசேகர பண்டார என்பவரின் வீட்டிலேயே லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், காலை வேளையில் பார்த்த போது, லொறி எரிந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, உரிமையாளர் இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதனையடுத்து சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Be the first to comment

Leave a Reply