யாழில் திடீரென கேட்ட வெடிப்பு சத்தத்தால் அச்சத்தில் மக்கள்!

யாழ்ப்பாணத்தில் திடீரென கேட்ட பாரிய வெடிப்பு சத்தம் மக்களை பெரும் அச்சமடைய வைத்துள்ளது. யாழ்ப்பாணம் அராலி இராணுவ முகாம் பகுதியியேலே இன்று மதியம் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இராணுவ முகாமில் இருந்த பயன்பாட்டிற்கு உதவாத வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையே இன்று முன்னெடுப்பட்டதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் இவ்விடயம் குறித்து அச்சமடையத் தேவையில்லை எனவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply