மணிவண்ணனால் ‘சட்டத்தரணிகள் அணி’ உருவாக்கம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் எற்பட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள் மணிவண்ணன் அவர்களுடன் தொடர்ந்தும் இணைந்து பயணிப்பதற்கு தமது பூரண ஆதரவை தெரிவித்தனர். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு என்று ஒரு சட்டவாளர் அணி ஒன்று அமைக்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிரச்சனைகளை கையாள்வதற்கு ஓர் சட்டவாளர் அணியை உருவாக்குவதற்கும் அதில் இணைந்து பயணிப்பதற்கும் அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு இளங்கோ அவர்களும் கலந்து கொண்டார்.

Be the first to comment

Leave a Reply