ஐரோப்பாவில் நிர்க்கதியான 13 ஆயிரம் பேர்!

ஐரோப்பாவின் கிரேக்க – லெஸ்போஸ் தீவில் அமைந்துள்ள மிகப்பெரிய அகதி முகாமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 13 ஆயிரம் பேர் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் எந்த உயிர் சேதங்களும் ஏற்படவில்லை.

எனினும் புகை மண்டலத்தினால் சிலர் சுவாசப் பிரச்சினைகளை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை தீ விபத்தினையடுத்து குறித்த பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply